தற்போதைய ஷாப்பிங் தளத்தில், செயலி அல்லது வலைதளத்தில் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் அணுகலாம். மற்ற பயன்பாடுகளை அணுக, நீங்கள் கூடுதல் செயலிகள் அல்லது வலைதளங்களை தேட வேண்டும். ONDC நெட்வொர்க் உங்களுக்காக ஒரு புதுமையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதை, ஷாப்பிங்கின் எதிர்காலம் என்றும் அழைக்கலாம்!
அவிழ்க்கப்பட்டது. வெளிப்படையானது. திறந்தது.
இந்த திறந்த நெட்வொர்க்கானது, அனைத்து தளங்களையும் தொழில்நுட்பம் மூலம் இணைத்து, அனைத்து பையர்கள் மற்றும் செல்லர்கள் தாங்கள் இருக்கும் செயலியை பொருட்படுத்தாமல், ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்துகொள்ள உதவுகிறது. இப்போது, நீங்கள் ஒட்டுமொத்த செல்லர் தெரிவுகளிலிருந்தும், நெட்வொர்க்கில் உள்ள எந்தவொரு செயலியின் வழியே கிடைக்கக்கூடிய ப்ராடக்ட்டுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம் - அனைத்தையும் ஒரே, ஒருங்கிணைந்த செயலி அல்லது வலைதளத்தினுள்.
More
ONDC நெட்வொர்க்கின் மூலம் ஷாப்பிங் செய்வதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- பல்வேறு ஷாப்பிங் அப்ளிகேஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. இச்செயலிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாக, நெட்வொர்க்கில் உள்ள மொத்த ப்ராடக்ட்டுகளையும் சேவைகளையும் நீங்கள் அணுகலாம். அவற்றின் அனுபவம் வெவ்வேறாக இருக்கலாம். எனவே, உங்கள் விருப்பங்களுக்கு சிறப்பாய் பொருந்தக்கூடியவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- இந்த நெட்வொர்க்கானது, ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் வளர்ந்து வரும் 12 ப்ராடக்ட் வகைகளை உள்ளடக்கிய 7.64+ Lakh -ற்கும் மேற்பட்ட செல்லர்கள்/சர்வீஸ் ப்ரொவைடர்களைக் கொண்டுள்ளது. ஆயினும், நெட்வொர்க்கின் இந்த ஆரம்ப கட்டத்தில், அனைத்து செயலிகளும், அனைத்து ப்ராடக்ட்டுகளையும் இடங்களையும் உள்ளடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெட்வொர்க் விரிவடைந்துகொண்டே செல்வதால், இந்த வரம்பு விரைவில் முடிவுக்கு வரப்போவதால், எவ்வகை ப்ராடக்ட் அல்லது சேவையையும் நீங்கள் ஆராய்ந்து வாங்குவதற்கு, நீங்கள் விரும்பும் எந்த செயலிகளையும் பயன்படுத்த முடியும்.
முதலில், உங்களுக்கு விருப்பமான வகையைத் தேர்ந்தெடுங்கள். ONDC நெட்வொர்க்கில் அந்த குறிப்பிட்ட வகையின் செல்லர்களிடம் இருந்து நீங்கள் வாங்க, உங்களுக்கு உதவக்கூடிய பையர் செயலிகளை நாங்கள் காட்டுவோம்
எப்படி வாங்குகிறீர்கள் என்பதை மீண்டும் யோசிக்கவும்
நெட்வொர்க் வளர்ந்து வருவதால், நெட்வொர்க்கானது இன்னும் பல வகைகளையும் டொமைன்களையும் சேர்க்கும். மேலும், ONDC நெறிமுறை-க்கு இணக்கமான பையர் அப்ளிகேஷன்களால் அவை இயக்கப்படும்.